
டெல்லி: நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு, ஒவ்வொரு ஏழையும் குடியரசுத் தலைவராக முடியும் என்பதற்கு தனது வாழ்க்கையும் ஒரு முன் உதாரணம் என்று கூறினார்.நாட்டின் 14 வது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நேற்றுடன் நிறைவடைந்தது.இதனை தொடர்ந்து இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது.எதிர்க்கட்சிகளின் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு முறைப்படி விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்தந்த மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். இதில் 99.18% சதவீத வாக்குகள் பதிவாகின.
கடந்த 21 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரவுபதி முர்முவுக்கு தலைமை நீதிபதி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் மேடையை அலங்கரித்தனர்.
நான் குடியரசுத் தலைவரானது ஒவ்வொரு ஏழை இந்தியனின் சாதனை – திரௌபதி முர்மு நெகிழ்ச்சி
டெல்லி: நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு, ஒவ்வொரு ஏழையும் குடியரசுத் தலைவராக முடியும் என்பதற்கு தனது வாழ்க்கையும் ஒரு முன் உதாரணம் என்று கூறினார்.
நாட்டின் 14 வது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது.
15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்பு- தலைமை நீதிபதி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்பு- தலைமை நீதிபதி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்
வேட்பாளர்கள்
வேட்பாளர்கள்
எதிர்க்கட்சிகளின் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டார்.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு முறைப்படி விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்தந்த மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். இதில் 99.18% சதவீத வாக்குகள் பதிவாகின.குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு கடந்த 21 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரவுபதி முர்முவுக்கு தலைமை நீதிபதி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் மேடையை அலங்கரித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சிகள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர். பதவியேற்றவுடன் பேசிய திரௌபதி முர்மு, ‘இந்தியாவின் அனைத்து குடிமக்களின் நம்பிக்கைகள், குறிக்கோள்கள், உரிமைகளின் அடையாளமாக நான் இருப்பேன். புனிதமான இந்த நாடாளுமன்றத்தில் இருந்து குடிமக்களை நான் வாழ்த்துகிறேன்.
உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு வலு சேர்க்கின்றன. குடியரசுத் தலைவராக நான் பதவியேற்று இருப்பது ஒவ்வொரு ஏழை இந்தியனின் சாதனை. நான் இந்திய தேசத்தை வளமாக்க பணியாற்றிடுவேன். பழங்குடியினத்தை சேர்ந்த நான் நாட்டின் குடியரசுத் தலைவராக பதவியேற்றது ஜனநாயகத்தின் மகத்துவம்.சிறிய கிராமத்தில் இருந்து வந்த நான் இந்த பதவிக்கு வந்தது பெருமையான தருணம். நாட்டில் ஒவ்வொரு ஏழையும் குடியரசுத் தலைவராக முடியும் என்பதற்கு எனது வாழ்க்கையும் ஒரு முன் உதாரணம். என்னை குடியரசுத் தலைவராக தேர்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி.’ என்று கூறினார்.
 IDYM India TV
IDYM India TV 
				 
		 
						
					